top of page
Welcome to Rajathi Family Kitchen

WELCOME TO RAJATHI FAMILY KITCHEN

CHEF RAJATHI SAIKUMAR

  • Facebook Orange Gumdrop
  • Twitter Orange Gumdrop
  • Google+ Orange Gumdrop

என் பெயர் ராஜாத்தி எனக்கு என் அன்னை அன்பாக ஆசையாக வைத்த பெயர்.நடுத்தர குடும்பத்தில் சாகோதரர் இருவர்,சகோதரி மூன்று பேரோடு பிறந்த எனக்கு சமையல் செய்வது மற்றும் செய்த சமையலை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடைவது மிகவும் பிடிக்கும்.

 

தாய் ஆசிரியை, தந்தை காவல் துறை. தாய் ஆசிரியை யாக  மட்டும் அன்றி  பல ஆசிரியைகளோடு மதிய உணவு (lunch break) ல் மற்றவர்களோடு உணவு பரிமாறிக்கொள்வது வழக்கம் இவள் சாம்பார் சாப்பாடு கொடுப்பாள், மற்றவர்கள் தக்காளி தோசை, ராகி புட்டு, சோள தோசை,ஜவரிசி உப்புமா போன்ற வற்றை கொடுப்பார்கள்.

 

அதை சுவைத்து பின் அதை என்களிடம்  பரிமாறிக்கொண்டு அதை விடுமுறை சனிக்கிசமை,  sunday ல்  சமைத்து  கொடுப்பாள்.

 

இவ்வாறு வித வித மன சத்தான சமையலை என் தாயிடம் கற்றுக்கொண்டேன்

 

என் தந்தை காவல் துறையில் பணி புரிந்த போதும் சமையல் செய்வதில் ஆர்வம் கொண்டவர்.  எல்லா வகை காய்களையும்  விதவித மாக சமைத்து தருவதில் தந்தைக்கு நிகர் யாரும் இல்லை.

 

ஒரு நாள் சுரைகாய் விதையை வாங்கி அதை வேப்ப மரத்துக்கு கீழ் விதைத்தார்.  அது வேப்பமரத்தை பர்றிக்கொண்டு சுரைக்காய் காய்க்கத் தொடங்கியது!!! தினமும் பசுமையான அருமையான சுரக்காய் கூட்டும் சப்பாத்தியும் தான் !!!! மிகவும் ஆரோகியமான சத்தான உணவுதான் என் பெற்றோர்கள் எங்களுக்கு கொடுத்தனர்.

 வெளிசாப்பாடு (hotel)  சாப்பாடு என்றும் கிடையாது.

 

பூண்டு, வரமிளகாய் சேர்த்த சட்டினி,பொதினா , கொத்துமில்லி சட்டினி போன்ற வித வித மான சட்டினிகளை நாள்தோறும் செய்வார்கள்.

நினைவு தெரிந்த நாள் முதல் பச்சை காய் கறிகளின் சாலட்,

பச்சை மிளகு, மாவடு இஞ்சி, எலும்பிச்ச பழத்தோடு சேர்த்த ஊறுகாய்!!

 

எந்த ஊறுகாய் செய்தாலும் உப்பும் எலும்பிச பழ சாரும் கலந்து தான் செய்வார்கள்!! எண்ணெய் சிறிதும் இருக்காது!!!

 

பனங்கிழங்கு காலத்தில், பனங்கிழகு வேகவைத்து தருவார்கள்

வேர்கடலை காலத்தில் வேர்கடலையை கொதிக்கற தண்ணீரில் உப்பு போட்டு வேகவைத்து தருவார் கள்  

bottom of page