குடமிளகாய் சாதம் (capsicum fried rice)
குடைமிளகாய் சாதம்
என் சம்பந்தியம்மாவுடன் skype ல் பேசிக்கொண்டு இருந்த போது மதியம் சாப்பாட்டு நேரம்!! அவர்கள் அம்மா மீனாட்சி சமைத்துக்கொண்டு இருந்தாள்!!!!
இன்று என்ன சமையல்? என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள் குடமிளகாய் சாதம் என்றார்!!!
உங்களுக்குதான் தெரியுமே எனக்கு விதவிதமான சமயலை கற்றுக்கொள்ள ஆசை என்று!!!
உடனே எப்படி எப்படி ? செய்தீர்கள்? என்று நான் கேட்ட உடனேயே.
அதன் செய்முறை சொல்லிக்கொண்டடே குடமிளகாய் சாதம் செய்து முடித்தாள்!!!!
அப்பப்பா!!! பார்ப்தற்க்கு உடனே!!!உண்ணத்தோன்றும் வண்ணம்!!! எனக்கு பசியை தூண்டியது.
அங்கு நான் இருந்தால் அவர்கள் செய்த குடமிளகாய் சாதத்தை நானும் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து இருப்பேன்!!! நான் இருப்பதோ கண்னுக்கு எட்டா தூரம் என்ன செய்வது?
அவர்கள் கொடுத்த செய்முறை படி நான் செய்தேன் அருமை அருமை!!! இதோ அதன் Recipe
1 கப் குடைமிளகாய் (துண்டுகள்)
1/2 கப் பச்சை பட்டாணி
1 வெங்காயம்(துண்துகள்)
1/2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1/2தேங்காய்
1/2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
3 வரமிளகாய்
1/2 டீ ஸ்பூன் மஞ்ஞள்பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப்பொடி
1/2 டீ ஸ்பூன் கடுகு
தேவைக்கு ஏற்ப உப்பு
தேவைக்கு ஏற்ப்ப எண்ணெய்
பத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி
கடுகு போட வேண்டும்,
பின் வெங்காயம், குடைமிளகாய், பட்டாணி போட்டு வதக்கவேண்டும், பின் மஞ்ஞள்பொடி ,பெருங்கயப்போடி போட வேண்டும்.
உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,கொத்தமல்லி விதை,வரமிளகாய்,தேங்காய் வறுத்து பொடியாக வைத்துகொள்ளவேண்டும்!!!
காய் வென்ததும் இந்த பொடியை போட்டு வதக்கவேண்டும்!!
பின் வெந்த சாதம் போட்டு கலக்கவும்!!!!
கட்டாயம் செய்து பாருங்கள்